TODAY’ GOD’S PROMISE/ இன்றைய இறைவனின் வாக்குறுதி

Day 1: The Unchanging God of the Covenant/

1. I am the LORD your GOD and I never change.  (Mal. 3:6)
நாள் 1: உடன்படிக்கையைக் காக்கும் மாறாத தேவன்/

நான் கர்த்தர் நான் மாறாதவர். 


I. Theme: Resting securely upon the immutability of God's holy character, trusting His eternal faithfulness, and standing firm in the covenant established and sealed forever in Jesus Christ.

I. மையப்பொருள்: தேவனுடைய மாறாத பரிசுத்த சுபாவத்தில் பூரணமாய் இளைப்பாறுதல், அவருடைய நித்திய உண்மைத்துவத்தை விசுவாசித்தல், மற்றும் கிறிஸ்து இயேசுவுக்குள் என்றென்றைக்குமாய் முத்திரையிடப்பட்ட உடன்படிக்கையில் உறுதியாய் நிலைநிற்குதல்.


II. God’s Promise Scripture: “For I am the Lord, I do not change; therefore you are not consumed, O sons of Jacob.” (Mal 3:6)

II. தேவனுடைய வாக்குத்தத்தம் — வேத வசனம் “நான் கர்த்தர், நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை.” (மல் 3:6) "யாக்கோபின் பிள்ளைகளே, ஆண்டவராகிய நான் மாறாதவர். அதனால்தான் நீங்கள் இன்னும் அழியாதிருக்கிறீர்கள். ஆமென், அல்லேலூயா!


III. Divine Meditation: 1. Human life is characterised by perpetual instability: physical strength wanes, finances fluctuate, earthly relationships falter, and human promises collapse under pressure. Left to ourselves, our wavering feelings, natural weaknesses, and sinful failures would quickly invite spiritual defeat and righteous judgment. [Ps 103:14–16; Isa 40:6–8]

III. தெய்வீக தியானம்: 1. மனித வாழ்க்கை எப்போதும் நிலையற்ற மாற்றங்களால் சூழப்பட்டுள்ளது: சரீர பலம் குறையலாம், பொருளாதாரங்கள் ஆட்டம் காணலாம், உலக மனிதர்களின் உறவுகளும் வாக்குறுதிகளும் நொறுங்கிப்போகலாம். நம்முடைய சுயபலத்தையும், ஊசலாடும் உணர்வுகளையும், மாம்சப் பலவீனங்களையும் மட்டுமே நாம் சார்ந்திருப்போம் என்றால், நாம் எளிதில் ஆவிக்குரிய சோர்விலும் நியாயத்தீர்ப்பிலும் விழுந்துபோவோம். [சங் 103:14–16; ஏசா 40:6–8]


2. Yet, the foundational peace of the believer rests not on our frail hold upon God, but upon His sovereign, unbreakable hold upon us. The Lord does not change His mind, annul His promises, or compromise His holiness; what He has spoken, He will establish, and what He has begun, He will complete. [Num 23:19; Jas 1:17; Phil 1:6]

2. ஆயினும், ஒரு விசுவாசியின் நிலையான சமாதானம் நாம் பலவீனமாய் தேவனைப் பிடித்திருக்கும் பிடியில் இல்லை; மாறாக, தேவன் நம்மீது வைத்துள்ள மாறாத, பிரிக்க முடியாத இறையாண்மையின் பிடியிலேயே உள்ளது. தேவன் மனிதனைப் போல மனம் மாறவோ, தம் வார்த்தையைத் திரும்பப் பெறவோ, தம்முடைய பரிசுத்தத்தில் சமரசம் செய்யவோ மாட்டார்; அவர் சொன்னதைச் செய்து முடிப்பார், துவக்கின நற்கிரியையை நிறைவுக்குக் கொண்டுவருவார். [எண் 23:19; யாக் 1:17; பிலி 1:6]


3. When facing intense spiritual warfare, emotional weariness, or times of drought, look away from personal inadequacy and fix your eyes entirely upon the unchanging Sovereign of the universe. [Heb 12:2; 2 Tim 2:13]

3. ஆவிக்குரிய போராட்டங்கள், உள்ளான சோர்வுகள் மற்றும் வறட்சியான பாதைகள் குறுக்கிடும்போது, உங்களின் சொந்த பலவீனங்களை நோக்காமல், அண்டசராசரங்களை ஆளுகை செய்யும் மாறாத தேவனை மட்டுமே நோக்கிப் பாருங்கள். [எபி 12:2; 2 தீமோ 2:13]


4. The cross and empty tomb of Jesus Christ stand as everlasting proof that God's covenant mercy can never be annulled. Because the Lord changes not, His grace remains inexhaustible, His chastening is purposeful and loving, and our eternal salvation remains steadfast forever. [Rom 5:8–10; Heb 6:17–19]

4. இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணமும், வெற்றிகரமான உயிர்த்தெழுதலும் தேவனுடைய உடன்படிக்கையின் இரக்கம் ஒருபோதும் ஒழிந்துபோகாது என்பதற்கு நித்திய அத்தாட்சியாய் நிற்கின்றன. கர்த்தர் மாறாதவராக இருப்பதினாலேயே, அவருடைய கிருபை வற்றிப்போவதில்லை, அவருடைய அன்பின் திருத்துதல் நன்மைக்கேதுவாய் முடிகிறது, நமது நித்திய மீட்பு தலைமுறை தலைமுறையாக உறுதியாய் நிற்கிறது. [ரோம 5:8–10; எபி 6:17–19]


IV. Prayer Through the Promise: 1. Sovereign Lord God, You alone are Yahweh, the Great I AM, the King eternal, immortal, and invisible. Heaven and earth will pass away, but Your Word abides forever, and Your compassions never fail. [Ps 102:25–27; 1 Tim 1:17; Matt 24:35]

IV. வாக்குத்தத்தத்தின்படி ஜெபம்: 1. சர்வ இறையாண்மையுள்ள தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே யெகோவாவாகிய 'இருக்கிறவராகவே இருக்கிற' நித்திய தேவன்; அழியாமையுள்ளவரும், காணப்படாதவருமான ராஜாதி ராஜாவே, வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும் உமது வார்த்தை என்றென்றைக்கும் நிலைநிற்கும்; உமது இரக்கங்களுக்கு முடிவே இல்லை. [சங் 102:25–27; 1 தீமோ 1:17; மத் 24:35]


2. I approach Your throne of grace in reverence and humility through the shed blood of Jesus Christ, acknowledging with deep gratitude that it is solely by Your unchanging covenant mercy that I am preserved and not consumed. [Heb 4:16; Heb 10:19–22]

2. இயேசு கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தின் வழியாய் மிகுந்த பயபக்தியோடும் தாழ்மையோடும் உமது கிருபாசனத்தண்டைக்கு வருகிறேன்; உமது மாறாத உடன்படிக்கையின் இரக்கத்தினாலேயே நான் நிர்மூலமாகாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறேன் என்பதை உணர்ந்து மனதார உமக்கு நன்றி செலுத்துகிறேன். [எபி 4:16; எபி 10:19–22]


3. Heavenly Father, establish my heart upon the unshakeable rock of Your immutability; whenever circumstances change and worldly foundations tremble, guard my mind from doubt, anxiety, and fear. [Ps 62:1–2; Isa 26:3]

3. பரலோகப் பிதாவே, அசைக்க முடியாத உமது மாறாத சுபாவமென்னும் கன்மலையின் மேல் என் இருதயத்தை நிலைநிறுத்தும்; உலக சூழ்நிலைகள் மாறும்போது, என் மனம் சந்தேகத்திற்கும், கவலைக்கும், பயத்திற்கும் இடங்கொடாதபடி உமது சமாதானத்தினால் காத்துக்கொள்ளும். [சங் 62:1–2; ஏசா 26:3]


4. Clothe me with the victorious life of the risen Christ, who conquered sin, Satan, and death; silence every accusation of the enemy, and anchor my faith firmly in the finished work of Calvary. [Rom 8:33–34; Rev 12:10–11]

4. பாவத்தையும், சத்துருவையும், மரணத்தையும் ஜெயித்த உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வெற்றி ஜீவனினால் என்னை அலங்கரியும்; சத்துருவின் சகல குற்றச்சாட்டுகளையும் மௌனமாக்கி, கல்வாரியின் பரிபூரண மீட்பின் கிரியையிலே என் விசுவாசத்தை உறுதியாய் நங்கூரமிடும். [ரோம 8:33–34; வெளி 12:10–11]


5. Fulfil Your eternal purposes through me according to Your sovereign wisdom, keeping me faithful until the day I see You face to face. In the mighty, holy, and unchanging name of Jesus Christ, my Lord and Saviour. Amen. [Ps 138:8; 1 Thess 5:23–24]

5. உமது பூரண ஞானத்தின்படி எனக்கான நித்திய சித்தத்தை நிறைவேற்றி, உம்மை முகமுகமாய்க் காணும் நாள்வரை என்னை உண்மையுள்ளவனாய்/உண்மையுள்ளவளாய் வழிநடத்தும். எங்கள் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையும் மாறாததுமான நாமத்தில் வேண்டுகிறேன் பிதாவே. ஆமென். [சங் 138:8; 1 தெச 5:23–24]


V. Personal Faith Confession and Declaration: 1. I boldly declare that the Lord my God is Yahweh, the immutable, eternal Sovereign, whose holiness, covenant love, and purposes never change. [Mal 3:6; Jas 1:17]

V. தனிப்பட்ட விசுவாச அறிக்கை மற்றும் பிரகடனம்: 1. என் தேவனாகிய கர்த்தர் மாறாதவரும் நித்தியருமான சர்வ இறையாண்மையுள்ள யெகோவா என்றும், அவருடைய பரிசுத்தம், உடன்படிக்கையின் அன்பு மற்றும் நித்திய சித்தம் ஒருபோதும் மாறாதவை என்றும் நான் தைரியமாய் அறிக்கைபண்ணுகிறேன். [மல் 3:6; யாக் 1:17]


2. I confess that my preservation and security do not rest upon my fragile strength or shifting feelings, but solely upon God’s unshakeable faithfulness sealed in Jesus Christ, who is the same yesterday, today, and forever. [Heb 13:8; 2 Tim 2:13]

2. என் பாதுகாப்பும் ஜீவனும் என் பலவீனமான சுயபலத்திலோ அல்லது ஊசலாடும் உணர்வுகளிலோ தங்கியிராமல், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற இயேசு கிறிஸ்துவுக்குள் முத்திரையிடப்பட்ட தேவனுடைய மாறாத உண்மைத்துவத்தின் மீதே அஸ்திபாரமிடப்பட்டுள்ளது என்று விசுவாசத்தோடு அறிக்கை செய்கிறேன். [எபி 13:8; 2 தீமோ 2:13]


3. I proclaim that because the Lord does not change, I am not consumed; His covenant mercies are new every morning, His grace is sufficient for every trial, and no weapon formed against me shall prosper. [Lam 3:22–23; 2 Cor 12:9; Isa 54:17]

3. கர்த்தர் மாறாதவராகவே இருக்கிறபடியினால் நான் ஒருபோதும் நிர்மூலமாவதில்லை; அவருடைய உடன்படிக்கையின் இரக்கங்கள் காலைதோறும் புதியவைகளாயிருக்கிறது, அவருடைய கிருபை சகல சோதனைகளிலும் எனக்குப் போதுமானது, எனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோகும் என்று பிரகடனம் செய்கிறேன். [புல 3:22–23; 2 கொரி 12:9; ஏசா 54:17]


4. I anchor my soul in the finished work of the cross and the power of the resurrection, confident that the faithful God who began a good work in me will bring it to completion until the day of Jesus Christ. [Rom 8:38–39; Phil 1:6]

4. சிலுவையின் பரிபூரண கிரியையிலும் உயிர்த்தெழுதலின் வல்லமையிலும் என் ஆத்துமாவை நங்கூரமிடுகிறேன்; என்னில் நற்கிரியையைத் துவக்கின உண்மையுள்ள தேவன், அதை இயேசு கிறிஸ்துவின் நாள்மட்டும் நிச்சயமாய் நிறைவேற்றி முடிப்பார் என்று முழு நிச்சயத்தோடு அறிக்கையிடுகிறேன். [ரோம 8:38–39; பிலி 1:6]


VI. Scripture-Based Thanksgiving: 1. "Through the Lord’s mercies we are not consumed, because His compassions fail not. They are new every morning; great is Your faithfulness." [Lam 3:22–23]

VI. வேதவசனத்தின் அடிப்படையிலான நன்றி செலுத்துதல்: 1. "நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவே இல்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது." [புல 3:22–23]


2. Holy and Eternal Father, I offer heartfelt thanksgiving to You, for You never break Your covenant nor alter the word that has gone forth from Your lips. Thank You for sustaining my life through every trial and spiritual battle by the power of the blood of Jesus Christ. Your faithfulness is immeasurable, Your promises are absolute, and Your kingdom endures throughout all generations. In Jesus' victorious name. Amen. [Ps 89:34; Ps 100:5; Heb 13:20–21]

2. பரிசுத்தமும் நித்தியமுமான பிதாவே, நீர் உமது உடன்படிக்கையை முறிக்காமலும், உமது உதடுகளிலிருந்து புறப்பட்ட வார்த்தையை மாற்றாமலும் இருப்பதற்காக உமக்கு மனமார்ந்த ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் வல்லமையினால், சகல போராட்டங்கள் மற்றும் சோதனைகளின் மத்தியிலும் என் ஜீவனை இதுவரை காத்துவந்த உமது கிருபைக்காக நன்றி செலுத்துகிறேன். உமது உண்மை அளவிட முடியாதது, உமது வாக்குத்தத்தங்கள் மாறாதவை, உமது ராஜ்யம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும். இயேசுவின் ஜெயமுள்ள நாமத்தில் வேண்டுகிறேன். ஆமென். [சங் 89:34; சங் 100:5; எபி 13:20–21]

_________________________________________________________________________

VII. Biblical Context and Meaning: 1. The book of Malachi was written to the post-exilic Jewish community who had returned from Babylonian captivity only to lapse into spiritual apathy, cynicism, and moral compromise. They doubted the Lord's love and sovereign justice, neglected sincere worship, withheld tithes and offerings, and desecrated the covenant of marriage. [Mal 1:2; Mal 2:10–14; Mal 3:8–14]

III. வேத சூழலும் பொருளும்: 1. மல்கியா தீர்க்கதரிசியின் புஸ்தகம் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த யூத சமூகத்திற்கு எழுதப்பட்டது; அம்மக்கள் விரைவில் ஆவிக்குரிய அசதி, அவநம்பிக்கை மற்றும் ஒழுக்கச் சீர்கேடுகளுக்குள் விழுந்துபோயினர். அவர்கள் தேவனுடைய அன்பையும் அவருடைய இறையாண்மைமிக்க நீதியையும் சந்தேகித்து, உண்மை ஆராதனையைப் புறக்கணித்து, தசமபாகங்களையும் காணிக்கைகளையும் வஞ்சித்து, விவாக உடன்படிக்கையைக் களங்கப்படுத்தினர். [மல் 1:2; மல் 2:10–14; மல் 3:8–14]


2. Despite their repeated unfaithfulness and rebellion, God revealed the true anchor of their preservation: His eternal, unchanging name—Yahweh—and His unconditional covenant made with Abraham, Isaac, and Jacob. The divine declaration, "I am the Lord, I do not change," proves that their survival was never founded upon human merit, good works, or emotional zeal, but solely upon God’s unshakeable faithfulness to His own Word. [Gen 15:17–18; Ex 3:14–15; Num 23:19]

2. அவர்களுடைய தொடர்ச்சியான துரோகத்தின் மத்தியிலும், அவர்கள் நிர்மூலமாகாமல் காக்கப்பட்டதன் மாறாத அஸ்திபாரம் அவர்களுடைய சொந்த நற்குணங்களோ, கிரியைகளோ, அல்லது வைராக்கியமோ அல்ல; மாறாக, தேவனுடைய நித்திய நாமமாகிய யெகோவா என்பதும், அவர் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் செய்த நிபந்தனையற்ற உடன்படிக்கையுமே ஆகும் என்று தேவன் வெளிப்படுத்தினார். "நான் கர்த்தர், நான் மாறாதவர்" என்கிற தெய்வீக வாக்குத்தத்தம், அவர்கள் முற்றிலும் அழிக்கப்படாமல் தப்பிப்பது தேவனுடைய மாறாத வார்த்தையின் உண்மைத்துவத்தினால் மட்டுமே என்பதை நிரூபிக்கிறது. [ஆதி 15:17–18; யாத் 3:14–15; எண் 23:19]


3. Because God does not alter His holy decrees, eternal counsel, or covenant love, He dealt with His people through purifying discipline rather than total destruction. In the fullness of redemptive history, this divine immutability is fulfilled in Jesus Christ, who is "the same yesterday, today, and forever." Every believer's eternal preservation, justification, and daily victory are anchored in the unchanging Triune God. [Heb 13:8; Rom 8:31–39]

3. தேவன் தம்முடைய பரிசுத்த கட்டளைகளையோ, நித்திய சித்தத்தையோ, உடன்படிக்கையின் அன்பையோ ஒருபோதும் மாற்றாதவர் என்பதால், தம் ஜனங்களை முற்றிலும் அழிக்காமல், அவர்களைச் சுத்திகரிக்கும் அக்கினியினால் சீர்படுத்தினார். மீட்பின் வரலாற்றின் பூரணத்தில், இந்த மாறாத தெய்வீகத் தன்மை "நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற" இயேசு கிறிஸ்துவில் பரிபூரணமாக நிறைவேறியுள்ளது. ஒவ்வொரு விசுவாசியின் நித்திய இரட்சிப்பும், நீதியும், அனுதின வெற்றியும் திரியேக தேவனுடைய மாறாத சுபாவத்தின் மீதே அசைக்க முடியாதபடி நங்கூரமிடப்பட்டுள்ளது. [எபி 13:8; ரோம 8:31–39]

_________________________________________________________________________


VIII. Practical Faith Application: 1. Anchor Identity in Covenant Grace: When condemned by feelings of failure or past weakness, turn instantly to the Lord in repentance, resting in the finished atonement of Christ rather than falling into self-pity or despair. [1 John 1:9; Rom 8:1]

VI. நடைமுறை விசுவாசப் பயன்பாடு: 1. உடன்படிக்கையின் கிருபையில் நிலைத்திருத்தல்: மாம்ச பலவீனங்களினாலோ கடந்த கால தவறுகளினாலோ சோர்வு ஏற்படும்போது, சுயபரிதாபத்தில் மூழ்காமல், உடனடியாக தேவ சமூகத்தில் பாவங்களை அறிக்கையிட்டு, கிறிஸ்துவின் மாறாத மீட்பின் கிருபையை விசுவாசத்தோடு பற்றிக்கொள்ளுங்கள். [1 யோவா 1:9; ரோம 8:1]


2. Surrender Shifting Circumstances in Prayer: Consciously surrender every unpredictable circumstance, health crisis, or financial challenge into the sovereign care of the immutable God, refusing to walk in worldly panic. [Phil 4:6–7; 1 Pet 5:7]

2. மாறும் சூழ்நிலைகளை ஜெபத்தில் அர்ப்பணித்தல்: உங்களுக்குக் கலக்கத்தையும் கவலையையும் உண்டாக்குகிற உடல்நலக் குறைவுகள், குடும்பக் காரியங்கள் மற்றும் பொருளாதாரப் போராட்டங்களை, அனைத்தையும் ஆளுகை செய்கிற மாறாத தேவனுடைய கரங்களில் விசுவாசத்தோடு ஒப்புக்கொடுத்து ஜெபியுங்கள். [பிலி 4:6–7; 1 பேது 5:7]


3. Demonstrate Godly Faithfulness: Since the God who called you is immutably faithful, reflect His holy nature by remaining steadfast in prayer, diligent in duty, and loyal to your spiritual commitments regardless of fluctuating feelings. [1 Cor 15:58; Col 3:23–24]

3. தெய்வீக உண்மையுள்ள வாழ்க்கையை வெளிப்படுத்துதல்: நம்மை அழைத்த தேவன் மாறாத உண்மையுள்ளவராய் இருப்பதுபோல, நாமும் நமது உணர்வுகளுக்கு அடிமையாகாமல், ஜெபத்திலும், ஆவிக்குரிய கடமைகளிலும், தனிப்பட்ட பரிசுத்தத்திலும் நிலைத்திருந்து அவருடைய நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும். [1 கொரி 15:58; கொலோ 3:23–24]