FAITH CONFESSION FOR CHILDREN






விசுவாச அறிக்கைகள் பிள்ளைகளுக்காக


(1).  "இந்த பூமியிலே எனக்கு உண்டான வேலையிலும், என்னுடைய பிரயாசத்திலும், என்னுடைய பிள்ளைகள் என்னைத் தேற்றுவார்கள்."  (ஆதி 5:29)


(2).  "என் பிள்ளைக ளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப் பார்கள்.  என் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்."  (ஏசாயா 54:13)


(3).  "என் பிள்ளைகள் சத்தியத் திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு வேறு யில்லை."  (2யோவான் 4)


(4).  "என் பிள்ளைகள் என் பந்தியைச் சுற்றிலும் ஒலிவ மரக் கன்றுகளைப் போல் இருப்பார்கள்" (சங 128:3)


(5).  "என் குமாரர் இளமையில் ஓங்கி வளருகிற விருட்சக் கன்றுகளைப் போவும், என் குமாரத்திகள் சித்திரந் தீர்ந்த அரமனை மூலைக்கற்களைப் போலவும் இருப்பார்கள்." (சங் 144:12)


(6).  "என் பிள்ளைகள் யோபு வைப் போல உத்தமரும், சன்மார்க்கரும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்குப் விலகு கிறவர்களுமாய் இருப்பார்கள்."  (யோபு 1:1)


(7).  "என் பிள்ளைகள் நோவாவைப் போல நீதிமான் களும், உத்தமர்களும், தேவனோடே சஞ்சரிக்கிற வர்களுமாய் இருப்பார்கள்."  (ஆதி 6:9)


(8).  "என் பிள்ளைகள் யோசேப்பைப் போல பரிசுத்த முள்ளவர்களாய் இருப்பார் கள்.  அவர்கள் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப் பண்ணுவார்."  (ஆதி 39:3).


(9).  "என் பிள்ளைகள் யோசுவாவைப் போல கர்த்த ரையே சேவிக்கிறவர்களாய் இருப்பார்கள்.  அவர்கள் உயிரோடு இருக்கிற நாளெல் லாம் ஒருவனும் அவர்களுக்கு முன்பாக எதிர்த்து நிற்ப தில்லை."  (யோசுவா 24:15; 1:5)


(10).  "என் பிள்ளைகள் தாவீதைப் போல தங்கள் செய்கைகளில் எல்லாம் புத்திமானாய் நடப் பார்கள்.  கர்த்தர் அவர்களோடு கூட இருக்கிறார்."  (1சாமு 18:14)


(11). "என் பிள்ளைகள் தாவீதைப் போல துதிக்கிற வர்களாய் இருப்பார்கள்." (சங் 103:1)


(12). "என் பிள்ளைகள் தாவீதைப் போல வாசிப்பதில் தேறினவர் கள், பராக்கிறம சாலிகள், யுத்தவீரர்கள், காரியசமர்த்தர் கள், சவுந்தரியமுள்ளவர்கள்." (1 சாமு16:18)


(13). "தாவீதைப் போல அவர்கள் இசைக்கருவிகளை வாசிக்கும் போதே அசுத்த ஆவிகள் விலகி ஓடும். நோய்கள் குணமாகும்." (1சாமு 16:23)


(14). "என் பிள்ளைகள் தாவீதைப் போல வேதத்தில் பிரியமுள்ளவர்களாய் வேதத்தை தியானிக்கிற வர்களாய் இருக்கிறபடியால் அவர்களை அதிக ஞான முள்ளவர்களாய் தேவன் மாற்றுவார்." (119: 97,98,99)


(15). "என் பிள்ளைகள் தானியேலைப் போல ஞானம், புத்திக்கும் அடுத்த எல்லா விஷயங்களிலும் மற்றவர் களைக் காட்டிலும் பத்து மடங்கு சமர்தராகக் காணப் படுவார்கள்." (தானி 1:20)


(16). "சாத்ராக், மேஷாக்,அபேத் நேகோவைப் போல என் பிள்ளைகள் தேவனையே ஆராதிக்கிறவர்களாக இருப்பார்கள்." (தானி 3:17)


(17). "என் பிள்ளைகள் வளர்ந்து, ஆவியிலே பெலன் கொண்டு, ஞானத்தினால் நிறைந்திருப் பார்கள் தேவனுடைய கிருபையும் அவர்கள் மேல் இருக்கும்." (லூக்கா 2:20)


(18). "என் பிள்ளைகள் இயேசுவைப் போல ஞானத்தி லும், வளர்த்தியிலும், தேவ கிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைவார்கள். (லூக்கா 2:52)


(19). "என் பிள்ளைகள் சாமு வேலைப் போல வளர்ந்து, கர்த்தருக்கும், மனுஷருக்கும் பிரியமாய் நடந்து கொள்வார் கள்." (1சாமு 2:26)


(20). "என் பிள்ளைகள் சிவந்த மேனியும், அழகிய கண்களும் நல்ல ரூபமுள்ளவர்களாய் இருப்பார்கள்." (1சாமு 16:22).


(21). "என் பிள்ளைகள் என் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவர்களும் என் முதிர் வயதிலே என்னை ஆதரிக்கிற வர்களுமாயிருப் பார்கள்." (ரூத் 4:15)


(22). "என் பிள்ளைகள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, அதை ஆண்டு கொள்வார்கள்." (ஆதி 1:28).


(23). "என் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்." (ஆதி 22:17)


(24). "என் சந்ததிக்குள் பூமியி லுள்ள சகல ஜாதி களும் ஆசீர் வதிக்கப்படும். (ஆதி 22:18)


(25). "என் பிள்ளைகள் ஜசுவரிய வான்களாகி, வரவர விருத்தி யடைந்து மகா பெரியவர்களா வார்கள்." (ஆதி 26:13)


(26). "கர்த்தர் எங்களை ஆசீர் வதித்து எங்கள் சந்ததியை பெருகப்பண்ணுவார்." (ஆதி 26:24)


(27). "தேவன் என் பிள்ளை களுக்கு வானத்து பனியையும் பூமியின் கொழுமையை யும் கொடுத்து, மிகுந்த தானி யத்தையும்,திராட்சரதத்தையும் தந்தருளுவார். (ஆதி 27:28)


(28). "எல்லாத் தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்ட தூதனானவர் என் பிள்ளை களை ஆசீர்வதிப்பாராக; இவர்கள் பூமியில் மிகுதியாய்ப் பெருகக்கடவர்கள்." (ஆதி 48:16)


(29). "என் பிள்ளைகளின் ஆகாரம் கொழுமையாயிருக் கும்; ராஜாக்களுக்கு வேண்டிய ருசிவர்க்கங்களை அவர்கள் தருவார்கள்." (ஆதி49:20)
(30). "என் பிள்ளைகள் விடுதலை பெற்ற பெண் மான்கள். இன்பமான வசனங்களை வசனிப்பார்கள்." (ஆதி49:21).


(31). "என் பிள்ளைகள் கனிதரும் செடி; அவர்கள் நீர் ஊற்றண்டை யிலுள்ள கனி தரும் செடி. (ஆதி 49:22).


(32). உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களி னாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களி னாலும், ஸதனங்களுக்கும், கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் தேவன் என் பிள்ளைகளை ஆசீர்வதிப்பார்." (ஆதி49:25).


(33). "கோசேன் நாட்டை விசேஷப்படுத்தினதுபோல என் பிள்ளைகளை விசேஷப் படுத்தி, என் பிள்ளைகளுக்கும் மற்ற வர்களுக்கும் வித்தியாசம் உண்டாகும் படி கர்த்தர் செய்வார்." (யாத் 8:22,23)


(34). "என் பிள்ளைகள் சகல வித வேலைகளையும், யுகித்துச் செய்கிறதுக்கு வேண்டிய ஞானமும், புத்தியும், அறிவும் உண்டாக, அவர்களை தேவ ஆவி யினால் நிரப்புவார்." (யாத் 31:5)


(35). என் பிள்ளைகளை ஆசீர்வதிப்பதே கர்த்தருககு பிரியம்." (எண் 24:1)


(36) "காண்டாமிருகத்துக் கொத்த பெலன் என் பிள்ளை களுக்கு உண்டு." (எண் 24:8)


(37). "என் பிள்ளைகளுக்கு விரோதமான மந்திவாதம் இல்லை. அவர்களுக்கு விரோதமான குறி சொல்லுத லும் இல்லை."


(38). "எங்கள் ஜீவனுள்ள நாளெல்லாம் நியாயப் பிரமாண நூலை (வேதாகமத்தை) வாசிப்போம். இப்படிச் செய்வதி னால், நானும் என் பிள்ளைக ளும் எங்கள் ராஜ் யத்திலே நீடித்து வாழ்வோம்." (உபா 17:20)


(39). "கர்த்தர் உண்டு பண்ணின எல்லா ஜாதிகளைப் பார்க்கிலும், புகழ்சியி லும், கீர்த்தியிலும், மகிமையி லும் என் பிள்ளைகள் சிறந்திருக்கும் படி செய்வார்." உபா 26:19)


(40). "என் பிள்ளைகள் என் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பார்கள்." (உ 26:19)


(41). "என் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளி லும் என் பிள்ளைகளை மேன்மையாக வைப்பார்." (உபா 28: 1)


(42). "என் பிள்ளைகள் பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப் பட்டிருப்பார்கள். வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள்." (உபா28:3)


(43). "என் பிள்ளைகள் வருகையி லும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார் கள். போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள்." (உபா 28:6)


(44). "என் பிள்ளைகளுக்கு விரோதமாய் எழும்பும் சத்துருக்களைக் கர்த்தர் அவகளுக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக் கொடுப் பார்; ஒரு வழியாய் என் பிள்ளை களுக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் அவர்களுக்கு முன்பாக ஓடிப் போவார்கள்." (உபா 28:7)


(45). "கர்த்தர் என் பிள்ளைகளின் களஞ்சியங்களிலும், அவர்கள் கையிடும் எல்லா வேலையிலும் அவர்களுக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; என் தேவனாகிய கர்த்தர் என் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் தேசத்திலே அவர்களை ஆசீர்வதிப்பார்." (உபா 28:8)


(46). "என் பிள்ளைகளை கர்த்தர் தமக்கு பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார். " (உபா 28:9)


(47). "கர்த்தருடைய நாமம் என் பிள்ளைகளுக்கு தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல் லாம் கண்டு, அவர்களுக்குப் பயப்படுவார்கள்."


(48). "எற்ற காலத்திலே என் பிள்ளைகளின் தேசத்திலே மழை பெய்யவும், அவர்கள் கையிட்டுச் செய்யும் வேலை களையெல்லாம் ஆசீர்திக்க வும் கர்த்தர் தமது நல்ல பொக்கிஷ சாலையாகிய வானத்தை திறப்பார்." (உபா 28:12)


(49). "என் பிள்ளைகள் அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப் பார்கள், அவர்களோ கடன் வாங்காதிருப்பார்கள்." (உபா 28:12)


(50). "என் பிள்ளைகள் கடல் களிலுள்ள சம்பூரணத்தையும், மணலுக்குள்ளே மறைந் திருக்கும் பொருள்களையும் அனுபவிப்பார்கள்." (உபா 33:19)


(51). "என் பிள்ளைகள் கர்த்தரு டைய தயவினாலே திருப்திய டைந்து, அவருடைய ஆசீர் வாதத்தினாலே நிறைந்திருப் பார்கள்." (உபா 33:23)


(52). "என் பிள்ளைகள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் தேவன் அவர்களுக்குக் கொடுப்பார்." (யோசுவா 1:3).


(53). "தேவன் என் பிள்ளைகளை விட்டுவிலகுவதுமில்லை, அவர்களை கைவிடுவது மில்லை." (யோசு1:5)


(54). "என் பிள்ளைகள் போகும் இடமெல்லாம் புத்தி மானாய் நடந்து கொள்வார் கள்." (யோசுவா 1:7)


(55). "என் பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; பெரிய காரியங்களைச் செய்வார்கள். அவர்கள் மேன் மேலும் பலப்டுவார்கள்." (1சாமு 26:25)


(56). "கர்த்தருடைய ஆசீர் வாதத்தினாலே என் பிள்ளை கள் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக." (2 சாமு 7:29)


(57). "என் பிள்ளைகள் போகிற இடங்களிலெல்லாம் கர்த்தர் அவர்களைக் காப்பாற்றுவார்." (2 சாமு 8:6)


(58). "பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த நாமத்தை என் பிள்ளை களுக்கு தேவன் உண்டாக்கு வார்." (1 நாளா 17:8)


(60). "தேவன் என் பிள்ளைகளை இரட்சித்து, அவர்களை ஆசீர்வதிப்பார்; அவர்களைப் போஷித்து, என்றென்றைக்கும் உயர்த்துவார்." (சங் 28:9)


(61). "கர்த்தர் என் பிள்ளை களுக்குப் போதித்து அவர்கள் நடக்க வேண்டிய வழியைக் காட்டுவார்; அவர்கள் மேல் தன் கண்ணை வைத்து, அவர்களுக்கு ஆலோசனை சொல்லுவார். " (சங் 32:8)


62.  என் பிள்ளைகள் கைவிடப்படுவதில்லை, என் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிவதில்லை. (சங் 37:25)


63.  தேவனின் மகிமை என் பிள்ளைகளுக்கு விளங்குவதாக. (சங் 90:16)
64.  "பொல்லாபு என் பிள்ளைகளுக்கு நேரிடாது.  வாதை அவர்கள் கூடாரத்தை அணுகாது."  (சங் 91:10)


65.  "என் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள்.  அவர்கள் சந்ததி தேவனுக்கு முன்பாக நிலை பெற்றிருக்கும்."  (சங் 102:28)


(66).  "கர்த்தர் நன்மையினால் என் பிள்ளைகளின் வாயைத் திருப்தியாக்குகிறார்.  கழுகுக்குச் சமானமாய் அவர்கள் வயது திரும்ப வால வயது போலாகிறது."  (சங் 103:5)


67.  கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயப்படுகிற எங்கள் மேலும், அவருடைய நீதி எங்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள் மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.  (சங் 103:17)


68.  என் சந்ததி பூமியில் பலத்திருக்கும்.  என் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.  ஆஸ்தியும், ஐசுவரியமும் அவர்கள் வீட்டிலிருக்கும்.  (சங் 112:2-3)


69.  கர்த்தர் எங்களையும் எங்கள்  பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார்.  (சங் 115:14)


70.  என் வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.  (127:5)


71.  கர்த்தர் என் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி என்னிடத்திலுள்ள என் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.  (சங் 147:13)


72.  கர்த்தர் என் பிள்ளைகளின் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் அவர்களை திருப்தியாக்குகிறார்.  (சங் 147:14)


73.  என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, என் பிள்ளைகள் ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்துவார்கள்.  (நீதி 27:11)


74.  என் பிள்ளைகள் எனக்கு ஆறுதல் செய்வார்கள். என் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவார்.  (நீதி 29:17)


75.  ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசணையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியாகிய கர்த்தருடைய ஆவியானவர் என் பிள்ளைகள் மேல் தங்கியிருப்பார்.  (ஏசா 11:2)


76.  என் பிள்ளைகள் வேர்பற்றி, பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும்.  (ஏசா 27:6)


77.  இனி என் பிள்ளைகள் வெட்கப்படுவதில்லை; இனி அவர்கள் முகங்கள் செத்துப் போவதுமில்லை.  (ஏசா 29:22)


78.  நித்திய மகிழ்சி என் பிள்ளைகளின் தலையின் மேலிருக்கும்.  சந்தோஷமும் மகிழ்சியும் அடைவார்கள்.  சஞ்சலமும் தவிப்பும் ஒடிப்போம்.  (ஏசா 35:10)


79.  என் சந்ததியின் மேல் தேவன் தம் ஆவியையும், என் சந்தானத்தின் மேல் தம் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவார். அதினால் அவர்கள் புல்லின் நடுவே நீர்க்கால்களின் ஒரத்திலுள்ள அலரிச் செடிகளைப்போல வளருவார்கள். (ஏசா 44:3-4)


80. தேவன் என் பிள்ளைகளுக்கு, பேரனுக்கு முன்னே போய் கோணலானவைகளைச் செவ்வையாக்குவார். (ஏசா 45:2)


81. வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் என் பிள்ளைகளுக்கு கொடுப்பார். (ஏசா 45:4)


82. என்னோடு வழக்காடுகிறவர்களோடே கர்த்தர் வழக்காடி என் பிள்ளைகளை இரட்சித்துக் கொள்வார். (ஏசா 49:25)


83. என் சந்ததியார் வலது புறத்திலும், இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவார்கள்; அவர்கள் ஜாதிகளைச் சுதந்தரித்துக் கொண்டு, பாழாய்க்கிடந்த பட்டணங்களை குடியேற்றுவிப்பார்கள். (ஏசா 54:3)


84. கர்த்தர் நித்தமும் என் பிள்ளைகளை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் அவர்கள் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, அவர்கள் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார். அவர்கள் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீருற்றைப் போலவும் இருப்பார்கள். (ஏசா 58:11)


85. என் பிள்ளைகள் யாவரும் நீதிமான்களும், என்றைக்கும் பூமியைச் சுதந்தரிக்குங் குடிகளும், தேவன் நட்ட கிளைகளும், அவர் மகிமைப்படும்படி அவருடைய கரங்களின் கிரியைகளுமாய் இருப்பார்கள். (ஏசா 60:21)


86. என் சந்ததி ஜாதிகளின் நடுவிலும் ஜனங்களின் நடுவிலும் அறியப்பட்டிருக்கும்; அவர்களைப் பார்க்கிற யாவரும் அவர்கள் கர்த்தரால் ஆசீர்வாதம் பெற்ற சந்ததியென்று அறிந்து கொள்வார்கள். (ஏசா 61:9)


87.  என்னோடே கூட என் சந்தானந்தமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.  (ஏசா65:23)


88.  என் பிள்ளைகள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, தங்களை அதிசயமாய் நடத்தி வந்த தங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பார்கள்; என் பிள்ளைகள் ஒரு போதும் வெட்க்கப்பட்டுப் பபோவதில்லை. (யோவேல் 2:26)


89.  கர்த்தர் என் பிள்ளைகள் மேல் தம் ஆவியை ஊற்றுவார்; அப்பொழுது என் குமாரரும், என் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்.  என் பிள்ளைகள் தரிசனங்களையும் காண்பார்கள்.  (யோவே 2:28)


90.  துஷ்டன் இனி என் பிள்ளைகள் வழியாய்க் கடந்து வருவதில்லை; அவன் முழுவதும் சங்கரிக்கப்பட்டான்.  (நாகூம் 1:15)


91.  கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் என் பிள்ளைகளைக் கீர்த்தியும் புகழ்சியுமாக வைப்பார்.  (செப் 3:20)


92.என் பிள்ளைகள் தினந்தோறும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்க்கிறதினால், அவர்கள் நற்குணசாலிகளா யிருக்கிறார்கள்.  (அப் 17:11)


93.  என் பிள்ளைகள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறார்கள்.  தேவனுடைய ஆவி அவர்களில் வாசமாயிருக்கிறார்.  (1 கொரி 3:16)


94.  என் பிள்ளைகளைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவறையுஞ் செய்ய அவர்களுக்குப் பெலனுண்டு.